கிரேக்க கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் தங்கள் அணி தோல்வியுற்றதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஸ்டேடியம் முழுவதையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன் தினம் கிரேக்க கால்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் PAOK அணியுடன் OLYMPIAKOS அணி மோதியது. இந்த போட்டி முதல் பாதி முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருக்கும்போது PAOK அணி ஒரு கோல் போட்டு முன்னணியில் இருந்தது. அதன் பின்னர் இறுதியில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் ஆத்திரமடைந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்திற்கு தீ வைத்தனர்.
கட்டுங்கடங்காத கூட்டத்தில் ரசிகர்கள் பலர் வன்முறையில் இறங்கி மைதானத்தில் உள்ள இருக்கைகள் அனைத்தையும் தீவைத்து கொளுத்தியதால் ஸ்டேடியமே பெரும் பரபரப்புக்கு ஆளானது. ரசிகர்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். மைதானத்தின் இருக்கைகள் பாதிக்கும் மேல் சாம்பலானது. இது தொடர்பாக இதுவரை ஏழு ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1jhgJXo” standard=”http://www.youtube.com/v/zfzFWYRmv00?fs=1″ vars=”ytid=zfzFWYRmv00&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9333″ /]