உச்சநீதிமன்ற நீதிபதி அளிக்க இருக்கும் தீர்ப்பை கருணாநிதி தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம். பேரறிவாளன் உள்பட 7 பேர்களின் விடுதலைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கின்றோம். இனியும் அதை தாமதப்படுத்தும் விதத்தில் கருணாநிதி கருத்து தெரிவித்திருப்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்று தெரிவித்துள்ளர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1mrERfe” standard=”http://www.youtube.com/v/au1MkGmXrQk?fs=1″ vars=”ytid=au1MkGmXrQk&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep2004″ /]இதுகுறித்து ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் இருந்து கூறிய கருத்து என்னவெனில்:
பேரறிவாளன் உள்பட 7 பேர்களின் தண்டனை ரத்து செய்யும் வழக்கில் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதி நேற்று கூறிய கருத்தை திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி ஒரு அறிவிப்பு தேவைதானா? என்றும் நீதிமன்ற மரபுகளுக்கு இது உகந்ததுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மூன்று தமிழர்களின் விடுதலையை உலகில் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், கருணாநிதி தீர்ப்பை தேர்தலுக்கு பிறகு அறிவிக்கவேண்டும் என தீர்ப்பை தாமதப்படுத்தும் நோக்கத்தில் அறிவிப்பு செய்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தீர்ப்பு மூவருக்கும் சாதகமாக வந்தால், தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நல்ல பெயர் வந்துவிடும் என்றும், அது தேர்தலில் பெரிய அளவில் அதிமுகவுக்கு சாதகமாக மாற்றிவிடும் என்ற அரசியல் பயம் காரணமாக திமுக தலைவர் இப்படி ஒரு நயவஞ்சக அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் “பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பேட்டி குறித்த கருணாநிதி கருத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
25 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார். வழக்கு இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் அதை தாமதப்படுத்த வேண்டாம்” என்று கருணாநிதியை அற்புதம்மாள் கேட்டுக்கொண்டுள்ளார்.