தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 3 நாட்கள் மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வரும் 22 ஆம் தேதி காலை 10 மணி முதல் 24 ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். தனியார் பார்களுக்கும் இது பொருந்தும் என்பதால் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மது விற்பனை இருக்காது.
தேர்தலை முன்னிட்டு பிரச்சனைகள் வருவதை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக டாஸ்மாக் மூடப்படுகிறது. ஆனாலும் குடிமகன்களும் அரசியல் கட்சி தொண்டர்களும் முன்கூட்டியே அதிகப்படியான சரக்குகளை வாங்கி கையிருப்பு வைக்கும் வேலையில் இன்று முதல் ஈடுபட்டுள்ளனர். இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.