பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமர் ஆனவுடன் லட்சக்கணக்கான தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே மீது விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என வைகோ இன்று தனது தேர்தல் பிரச்சார உரையில் கூறியுள்ளார்.
இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த வைகொ, “இலங்கை அதிபர் ராஜபக்சே செய்த குற்றங்களை ஐ.நா சபை போன்ற அமைப்புகள் தட்டிக்கேட்க தயங்கினாலும், மோடி தலைமையிலான இந்திய அரசு தட்டி கேட்கும்., ராஜபக்சே மிது விசாரணை கமிஷன் அமைத்து அவரை இந்தியாவிற்கு வரவழைத்து விசாரணை செய்யப்படும்.
மேலும் சில கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றன. இதுகுறித்து ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்துள்ளோம். பணம் கொடுத்த கட்சிகளின் மீது தகுந்த தண்டனையை தேர்தல் கமிஷன் அளிக்க வேண்டும் என வைகோ பேசினார்.