உலகப் போட்டியில் தங்கம் வென்ற ஒரே இந்திய வீராங் கனை

anjuஇன்றுபோல், பெண்களை விளையாட்டுத்துறை அதிகம் பார்த்திராத சில ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில், காலில் ஷூ மாட்டி, களத்தில் இறங்கிய இரண்டு ஸ்போர்ட்ஸ் ஸ்டார்கள் இவர்கள்!

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த உலக தடகளப் போட்டி ஒன்றில் இரண்டாம் இடம் பிடித்து ‘வெள்ளிப்பதக்கம்’ வென்ற அஞ்சு பாபி ஜார்ஜ், இன்று அதேபோட்டியில் தங்கம் வென்றவராக அறிவிக்கப்பட்டு, அதற்கான பதக்கம் வந்து சேர்ந்திருக்கும் குஷியோடு இருக்கிறார்.

2003-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் லாங் ஜம்பில் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலப்பதக்கம் பெற்றபோது, உலக அத்லெட் சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்று, நம் ‘ஸ்போர்ட்ஸ் டார்லிங்’ ஆனவர் அஞ்சு.

”படிப்பைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக் கூடாது என்று மிரட்டிவந்த பெற்றோர்களுக்கிடையில், என் தந்தை கே.டி.மார்கோஸ் வேறுபட்டிருந்தார். எட்டாம் வகுப்பில் இருந்து முறையான விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் 7 விளையாட்டுகள் கலந்த ‘ஹெப்டத்லான்’-ல் கவனம் செலுத்தினாலும், நாட்கள் செல்லச் செல்ல லாங்க் ஜம்ப், ஹர்டில்ஸ் இதில் எல்லாம் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 96-ல் டெல்லி ஜூனியர் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் லாங்க் ஜம்பில் நான் பெற்ற பதக்கம்தான், என் வெற்றிகளுக்குத் தொடக்கம். படிப்படியாக முன்னேறிய என்னை, 2003-ம் ஆண்டு பெற்ற வெண்கலப்பதக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது” என்றவர், தாமதமாகக் கிடைத்த தங்கம் குறித்தும் பேசினார்.

”2005-ம் ஆண்டு மொனாகோவில் நடந்த உலக அத்லெட் ஃபைனல்ஸில் வெள்ளிப்பதக்கம் பெற்றேன். அதில் முதல் இடம் பிடித்தவர்… ரஷ்ய நாட்டு வீராங்கனை கொடோவா. அவர் ஊக்கமருந்து பயன்படுத்திதான் வெற்றி பெற்றார் என்பது ஒன்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டு, அந்தத் தங்கப் பதக்கம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, இப் போது எனக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் உலகப் போட்டியில் தங்கம் வென்ற ஒரே இந்திய வீராங் கனை என்ற சிறப்பைப் பெற் றுள்ளேன். உலகிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் அனை வரும் கூடியிருந்த அந்தச் சபை யில், அனைவரின் முன்னிலை யில் பதக்கம் பெறும்போது கிடைக்கும் சந்தோஷத்தை இழந்துவிட்டதில் கொஞ்சம் வருத்தம்தான்” என்று சொல்லும் அஞ்சு, தற்போது, குடும்பம், குழந்தைகள் என்று பிஸியாக இருக்கிறார்.

”சென்னையில் கஸ்டம்ஸ் துறையில் பணியாற்றி வருகி றேன். என் கணவர் ராபர்ட் பாபி ஜார்ஜ், முன்னாள் தேசிய ட்ரிபிள் ஜம்ப் வீரர். அவர்தான் என் பயிற்சியாளரும். நானும் போட்டியாளர்களை உருவாக் கும் பயிற்சியாளராக, மீண்டும் விளையாட்டில் களமிறங்க நினைக்கிறேன். அதேசமயம்… ஆரோன், ஆண்ட்ரியா என இரண்டு பெண்குழந்தை களுக்குப் பொறுப்பான தாயாக இருந்து சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பதே இந்த நொடியில் என் வாழ்வின் ஆதாரம்!”

Leave a Reply