“மைக்ரோசாப்ட் மொபைல்ஸ்” என பெயர் மாறுகிறது நோக்கியா.

nokia and microsoft

நோக்கியா நிறுவனத்தின் செல்போன் பிரிவை பில்கேட்ஸ் அவர்களின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 40,0000 கோடிகு விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான நடைமுறை வரும் 25ஆம் தேதி முடிகிறது என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நோக்கியோ பெயரை மைக்ரோசாப்ட் மொபைல்ஸ் என்று பெயர் மாற்றப்படும் என தெரிகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை எனினும் பெயர் மாற்றுவது உறுதி என மைக்ரோசாப்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நோக்கியா என்ற பெயரை மாற்றினால் தற்போது மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாகிவரும் லூமியா மற்றும் ஆஷா ஆகிய மாடல்களின் விற்பனை பெருமளவு பாதிக்கும் என டெல்லியின் மூத்த விற்பனை பிரதிநிதி மனீஷ் யாதவ் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் சென்னை நோக்கியோ ஆலை பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது.  இந்த நிறுவனத்தை வாங்க தைவான் நாட்டின் HTC நிறுவனம் வாங்க திட்டமிட்டு முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

Leave a Reply