மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தினுள் புகுந்த சிறுத்தை ஒன்று கிராம மக்களை விரட்டி விரட்டி கடித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கிராம மக்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர் அந்த சிறுத்தையை அடித்து கொன்றனர்.
நேற்று காலை மகாராஷ்ட்ரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்பூர் என்ற கிராமத்திற்குள் ஒரு சிறுத்தை ஆவேசமாக புகுந்தது. கிராம மக்களை விரட்டி விரட்டி கடித்ததால், பெரும் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். \கிராமத்து இளைஞர்கள் கையில் உருட்டுக்கட்டைகளுடன் திரண்டு சிறுத்தையை அடித்து கொல்ல முயற்சி செய்தனர்.
சிறுத்தை அவர்களின் பிடியில் சிக்காமல் கூரை மீதும், ஓட்டின் மீதும் ஏறி, பலரை கடித்து குதறியது. நான்குமணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிராமத்தின் இளைஞர்களின் பெரும் முயற்சியால் சிறுத்தை அடித்து கொல்லப்பட்டது. அதன்பின்னர்தான் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கோடைகாலம் என்பதால் காட்டில் தண்ணீர் வசதி இல்லை என்றும், அதனால் சிறுத்தை ஊருக்குள் புகுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அடித்துக்கொல்லப்பட்ட சிறுத்தைக்கு இரண்டு முதல் மூன்று வயது இருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிறுத்தையால் ஒரு பெண் உள்பட 6பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1kVvlyK” standard=”http://www.youtube.com/v/gZN8hlvSDkI?fs=1″ vars=”ytid=gZN8hlvSDkI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4844″ /]