பூஜ்யமாகும் தேமுதிக. கருத்துக்கணிப்புகளால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த்.

dmdk

தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக சேலம் இருந்து வருகிறது. இங்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் மச்சான் சுதீஷ் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாமக அருள் என்பவரை வேட்பாளராக ஏற்கனவே அறிவித்து தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த தேமுதிக அடம்பிடித்து சேலத்தை கைப்பற்றியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாமக வேட்பாளர் அருள், தேமுதிகவை தோற்கடிக்க உள்குத்து வேலை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் சேலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று கணித்துள்ளன. சேலத்தில் வன்னியர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் அதிமுகவின் பன்னீர்செல்வம்தான் வெற்றி பெறுவார் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.

சேலம் தொகுதி மட்டுமல்ல, தேமுதிக கட்சி போட்டியிடும் 14 தொகுதிகளிலும் அக்கட்சி பின்னடைவை சந்தித்து வருவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பிரபல பத்திரிகைகளான ஜூனியர் விகடன், நக்கீரன், மற்றும் தந்தி டிவி ஆகியவைகளின் கருத்துக்கணிப்பில் சுதீஷ் உள்பட தேமுதிகவின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைவார்கள் என்றுதான் கணித்துள்ளன. இத்தகைய கருத்துக்கணிப்புகளால் விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெருவாரியான வட இந்திய ஊடகங்கள் தமிழகத்தில் அதிமுக கட்சிதான் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply