தற்கொலை செய்து கொள்ளும் முன் மோடிக்கு கடிதம் எழுதிய மர்ம நபர். உ.பியில் பெரும் பரபரப்பு.

 

9உத்தரபிரதேசத்தில் உள்ள ஓம் பிரகாஷ் திவாரி என்ற 35 வயது நபர் பொருளாதாரப் பிரச்னையால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது மரணத்துக்குப் பின்னர் தன்னுடைய மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இந்த உருக்கமான சம்பவத்தால் மோடி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

ஓம் பிரகாஷ் திவாரி கடுமையான பொருளாதார பிரச்சனையால் பல மாதங்களாக நிம்மதியின்றி தவித்து வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு மசூரி பகுதியில் ரயிலின் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

 

அவரது உடல் கைப்பற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், அவருடைய சட்டைப் பையில் இருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு உருக்கமான வேண்டுகோளை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

அவரது கடிதத்தில் இருந்த வாசகங்கள் வருமாறு: ‘அன்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே..! நீங்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆகப் போகிறீர்கள். பொருளாதாரப் பிரச்னையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மரணத்துக்குப் பின்னர் என் மகளை பார்த்துக் கொள்ளும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply