சந்தியாவின் மகள் இந்தியாவை ஆளும் நேரம் வந்துவிட்டது. நாஞ்சில் சம்பத்

nanjil sambathநேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் அதிமுகவிற்கு ஆதரவாக மதுரை கோ.புதூரில் நாஞ்சில் சம்பத், அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பேசினா.

தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. சந்தியாவின் மகள் இந்தியாவை ஆளும் நேரம் நெருங்கிவிட்டது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் இந்தியாவை பாதுக்காக வரும் இரும்பு லேடிதான் ஜெயலலிதா.

இது பாராளுமன்றத்துக்கான தேர்தல் என்பதை கூட அறியாத ஸ்டாலின் அதிமுக அரசை குறைகூறிக்கொண்டு இருக்கின்றார். பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறாமல் கருணாநிதி கைகாட்டுபவர்தான் பிரதமர் என சிறுபிள்ளைத்தனமாக கூறிவருகிறார் ஸ்டாலின். தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவராக கூட ஆகமுடியாத ஒருவர் இந்திய பிரதமரை எப்படி கைகாட்ட முடியும்?

காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க நாம் மூன்றாவது சுதந்திரப் போருக்கு தயாராக வேண்டும். நாட்டை காவு கொடுத்த காங்கிரஸை இந்த தேர்தலின் மூலம் நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி கடந்த பத்து வருடங்களாக கூட்டணி சேர்ந்திருந்த திமுக மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயங்காது. அதனால் திமுகவிற்கு படுதோல்வியை பரிசாக கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் மதுரையில் பேசியுள்ளார்,

Leave a Reply