நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி மிகவும் நிதானமாக விளையாடி 20 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஸ்மித் 50 ரன்கள் எடுத்தார். ஆனால் அவருக்கு துணையாக நிலைத்து நின்று யாரும் ஆடவில்லை. மெக்கல்லம், ரெய்னா, புளூசியஸ், தோனி ஆகியோர் ஒற்றை இலக்க எண் ரன்களுடன் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். கடைசி நேரத்தில் ஜடேஜா இரண்டு சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்தார்.
141 ரன்கள் என்ற இலக்குடன் நம்பிக்கையுடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. இரண்டாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் நாயர் அவுட் ஆனார். பின்னர் அடுத்தடுத்த இடைவெளிகளில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர்களின் அசத்தல் பவுலிங் காரணமாக ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜடேஜா நான்கு விக்கெட்டுக்களை கைபற்றியதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இன்று ஷார்ஜாவின் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.