மேஷம்
இன்றைய தினம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படு வீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
மிதுனம்
இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி குணங்கள்
கடகம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
ராசி குணங்கள்
சிம்மம்
எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ராசி குணங்கள்
கன்னி
இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ராசி குணங்கள்
துலாம்
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்க காரியங்களிலிருந்த பின்னடைவு நீங்கும். வயிற்றுவலி, மனஉளைச்சல் நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக் குறியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
ராசி குணங்கள்
தனுசு
இன்றையதினம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள். கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி குணங்கள்
கும்பம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி குணங்கள்
மீனம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் விண் விவாதங்கள் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்