நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு மற்றும் நயன் தாரா இணைந்து நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் இருந்து திடீரென விலக நயன்தாரா முடிவு செய்திருப்பதால் இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருந்தார். அவர் இந்த படத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்தது. ரூ.1 கோடி அட்வான்ஸும், படப்பிடிப்பின் இடையே ரூ.50 லட்சமும் நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டது. சென்ற வாரம் படப்பிடிப்புக்கு நயன்தாராவை பாண்டிராஜ் அழைத்தபோது, மீதி பணம் ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் படப்பிடிப்புக்கு வரமுடியும் என்று கறாராக சொல்லிவிட்டார்.
நயன்தாரா சொன்ன தேதிக்குள் பணத்தை தயாரிப்பாளர் கொடுக்க முடியாததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் நயன்தாரா இரண்டு தெலுங்கு படங்களுக்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்தவிட்டபடியாலும், சிம்பு செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக தொடர்ந்து இரண்டு மாதங்கள் கால்ஷீட் கொடுத்துவிட்ட காரணத்தாலும் இந்த படம் டிராப் ஆகும் நிலைக்கு வந்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் சிம்பு- நயன்தாரா இணைந்து நடிக்கும் திரைப்படம் வெளிவரும் என்று ஆவலாக இருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.