இன்றுமுதல் நோக்கியா நிறுவனம் கைமாறுகிறது. ரூ.42000 கோடிக்கு மைக்ரோசாப்ட் வாங்கியது.

Nokia-Microsoft-acquisition

நோக்கியா நிறுவனத்தின் செல்போன் பிரிவு இன்று முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கைமாறுகிறது.

சர்வதேச சந்தையில் கொடிகட்டி பறந்துவந்த நோக்கியோ செல்போன் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் புதுப்புது மாடல்களினால் கொஞ்சம் கொஞ்சமாக தன் செல்வாக்கை வாடிக்கையாளர்களிடம் இருந்து இழந்தது. இதனால் நோக்கியா நிறுவனத்தின் பங்குகளும், விற்பனையும் குறைந்து வந்ததால், அந்த நிறுவனத்தை வாங்கிக்கொள்ள பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் முன்வந்தது.

இந்திய மதிப்பில் ரூ.42,000 கோடி மதிப்பிற்கு நோக்கியா செல்போன் பிரிவை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் செய்தது. அந்த நடைமுறை இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. ஆயினும் சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளதால், இதை மட்டும் மைக்ரோசாப்ட் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆயினும் மைக்ரொசாப்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் செல்போன்களை சென்னை நோக்கியோ நிறுவனம் தயாரித்து கொடுக்கும்

Leave a Reply