கடந்த 16ஆம் தேதி 476 பயணிகளுடன் சென்ற தென்கொரிய கப்பல் மூழ்கி விபத்தான துயர சம்பவத்தில் நேற்று ஒரு அதிர்ச்சி தகவலாக கப்பலில் உள்ள ஒரே அறையில் 48 மாணவிகளின் பிணம் மீட்கப்பட்டதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை மொத்தம் 183 பேர் பலியாகியுள்ளதாக்வும், இன்னும் 115 பேர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
தென்கொரிய தலைநகர் சியோல் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்புப்பணிகள் வெகு தீவிரமாக இரவுபகலாக நடந்து வருகிறது. கப்பலில் மொத்தம் 111 அறைகள் இருப்பதாகவும், ஒவ்வொரு அறையாக திறந்து மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் நேற்று கப்பலின் ஒரு அறையை மீட்புப்பணி வீரர்கள் திறந்து பார்த்தபோது, அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். ஏனெனில் அங்கு life jacket அணிந்தபடி 48 மாணவிகள் உயிரிழந்திருந்த அதிர்ச்சி காட்சியை அவர்கள் பார்த்தனர்.
பின்னர் மீட்புப்படையினர்களில் தீவிர நடவடிக்கை காரணமாக அனைத்து உடல்களும் வெளியே கொண்டுவரப்பட்டது. மாணவிகளின் உடல்களை பார்த்ததும் அவர்களுடைய பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்த காட்சியை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று கப்பலில் மரணமடைந்த மாணவிகளுக்காக ஒருநிமிடம் வெள்ளை மாளிகையில் மெளன அஞ்சலி செலுத்தினார்.