தெலுங்கு படவுலகில் நயன்தாரா நடிக்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கங்களில் இருந்து இடைக்கால தடைக்கால விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை கோலிவுட்டுக்கும் நீடிக்கும் நிலை இருப்பதால் நயன்தாரா சினிமாவில் இருந்தே வெளியேறக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நம்பர் ஒன் இடத்தை அடைந்திருக்கும் நயன்தாரா, தற்போது ஒரு படத்தில் நடிக்க இரண்டு கோடி சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் அவர் நடித்த அனாமிகா என்ற தெலுங்கு படத்தின் புரமோஷனுக்கு அவர் வர மறுத்ததால், இயக்குனர் சேகர் கம்முலா அவர் மீது கடுங்கோபம் அடைந்தார். தெலுங்கு படவுலகில் மிகவும் செல்வாக்குடன் இருக்கும் அவர் நயன்தாரா மீது தடைவிதிக்க வேண்டும் என்று கூறிய வற்புறுத்தலின் பேரில் தெலுங்கு படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோலிவுட்டில் உள்ள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களையும் நயன்தாராவுக்கு தடைவிதிக்குமார் சேகர் கம்முலா கேட்டுக்கொண்டுள்ளார். அவருடைய கோரிக்கை ஆலோசனை செய்யப்படும் என்று கோலிவுட்டில் இருந்து அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தடை விதிக்கப்பட்டால் நயன்தாரா, சினிமாவைவிட்டே விலக நேரிடும் என்பதால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும் அவர் சேகர் கம்முலாவுடன் எவ்வித சமரச முயற்சிக்கும் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.