நீலகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட ஆ.ராசா, அவருடைய தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ.5000 கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மிது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆ.ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆயினும் அவரை நீலகிரி தொகுதி வேட்பாளராக திமுக போட்டியிட அனுமதி கொடுத்தது. எனவே பாஜக உள்பட பல கட்சிகள் அவரை தோற்கடிக்க பெரும் முயற்சி செய்தன.
நேற்று முன் தினம் தேர்தல் நாளில் ஒரு ஓட்டுக்கு ரூ.5000 ஆ.ராசா தொகுதி மக்களுக்கு கொடுத்ததாக அதிமுகவினர் புகார் கூறினார்.அதிமுகவை சேர்ந்த திருமுருகன்பூண்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் இன்று போலீசில் புகார் அளித்ததன் பேரில் ஆ.ராசா மீது உள்பட 50 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.