ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று ஷார்ஜாவில் நடந்த ஒரு போட்டியில் சென்னை அணி ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ச்சியாக நான்கு வெற்றிகள் பெற்று சாதனை படைத்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதரபாத் அணி, 20 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் தவான் 7 ரன்களில் மூன்றாவது ஓவரிலேயே அவுட் ஆனாலும், பின்ச் நிலைத்து நின்று ஆடி 44 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் ராகுல் 25 ரன்களும், சமி 23 ரன்களும், ஷர்ம 17 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் ஹிவ்வின்ஹாச் ,அமற்றும் ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, ஸ்மித் மற்றும் மெக்கல்லம் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 19.3 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் 66 ரன்களும், மெக்கல்லம் 40 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணியின் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த மற்றொரு போட்டியில் மும்பை அணியை டெல்லி அணி வீழ்த்தியது. மும்பை இந்த போட்டியோடு சேர்த்து தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து பரிதாப நிலையில் உள்ளது.