கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்: தடுப்பதற்கு சில வழிகள்

12

வெயில்காலங்களில் காற்றுக் காக கதவைத் திறந்து வைத்துக் கொண்டும், மொட்டை மாடியிலும் தூங்குபவர்களின் வீட்டை குறிவைத்து திருடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த திருடர்களிடம் இருந்து உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள போலீஸார் சில ஆலோச னைகளை வழங்கியுள்ளனர்.

கத்திரி வெயில் தொடங்கு வதற்கு முன்பே சென்னையில் வெயிலின் தாக்கம் 108 டிகிரியை கடந்து விட்டது. இதனால் வீட்டில் ஏசி வசதி இல்லாதவர்களில் சிலர் காற்றுக்காக வாசல் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கு கின்றனர். மேலும் சிலர் மொட்டை மாடிகளுக்கு சென்று காற்றாட படுத்துக் கொள்கின்றனர். அப்படித் தூங்குபவர்களின் வீடுகளைக் குறிவைத்து அதிக திருட்டு கள் நடக்கலாம் என்று காவல் துறையினர் எச்சரிக்கிறார்கள்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறியதா வது: கதவு, ஜன்னல்களை திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடுகளில் திருடுபவர்கள் பலர் அவர்க ளுக்கு அருகில் வசிக்கும் நபர்கள் அல்லது இவர்களின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்களாகத்தான் இருப்பார் கள். மிக அரிதாக மட்டுமே வெளியில் இருந்து திருடர்கள் வருவார்கள். இந்த திருட்டை தடுக்க பல வழிகள் உள்ளன.

கதவை திறந்து வைத்து தூங்கும்போது, கதவுக்கு அடியில் கண்ணுக்கு தெரியாதவாறு ஒரு கயிறு கட்டி வைக்க வேண்டும். நீங்கள் இப்படி கட்டுவது பக்கத்து வீட்டுக்காரர்களுக்குகூட தெரியக்கூடாது. திறந்திருக்கும் கதவு வழியாக உள்ளே நுழை யும் திருடன் இந்த கயிற்றில் தட்டி கீழே விழ அதிக வாய்ப்பு கள் உள்ளன. கதவை திறந்து வைத்து படுக்கும்போது திருடர்கள் கையில் எளிதாக கிடைக்கும் படி விலை உயர்ந்த பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது. ஜன்னல்களில் கொசு வலை போன்றிருக்கும் இரும்பிலான வலைகளை பொருத்த வேண்டும்.

கதவுகளை அடைத்து விட்டு மாடிகளில் தூங்குபவர்கள் அவ்வப்போது எழுந்து வந்து வீட்டை சோதனை செய்வது அவசியம். சிறு சத்தம் கேட்டாலும் உஷாராக வேண்டும்.

கதவுகளில் கயிறு கட்டி, அந்த கயிற்றின் மற்றொரு முனையை ஒரு வெங்கல மணியில் கட்ட வேண்டும். நைசாக கதவை திறந்தாலும் மணி அடித்து விடும். இந்த மணி சத்தம் நமக்கு எச்சரிக்கையையும், திருடனுக்கு பயத்தையும் உண்டாக்கும்.

கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்கள் தங்கள் வீட்டு முகவரியை அருகேயுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து செல்வது கூடுதல் பாதுகாப்பை கொடுக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply