ஆண்ட்ரியா, பூஜாகுமாருக்கு ஆஸ்திரேலியா தடை. கமல் அதிர்ச்சி.

kamal

கமல்ஹாசன் நடித்து வரும் உத்தமவில்லன் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய படப்பிடிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டு தற்போது படப்பிடிப்பு துருக்கியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இயக்குனர் ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகிய இருவருக்கும் ஆஸ்திரேலியா செல்ல விசா கிடைக்காததால்தான் துருக்கி நாட்டிற்கு படப்பிடிப்பு மாற்றியதாக கூறப்படுகிறது. விஸ்வரூபம் 2 படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றபொது இருவர் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதாகவும், அதன் காரணமாகத்தான் இருவருக்கும் விசா கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கமல் பின்னர் படப்பிடிப்பை துருக்கிக்கு மாற்றும்படி இயக்குனருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் கமல் மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டு சூப்பர் ஸ்டாராகவும், உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டு நாடக நடிகராகவும் நடிக்கிறார். மனோரஞ்சன் கேரக்டர் படப்பிடிப்பு மே மாதத்துடன் முடிவடைந்துவிடும் என்றும் அதன்பின்னர் கமல் 8ஆம் நூற்றாண்டு நடிகராக மாற இருக்கிறார் என்றும் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்

Leave a Reply