தமிழக அரசுக்கு சென்னை நோக்கியா நிறுவனம் ரூ.240 கோடி வரி செலுத்த ஐகோர்ட் உத்தரவு.

6abதமிழக அரசு தொடர்ந்த மதிப்பு கூட்டு வரி ஏய்ப்பு வழக்கில் ரூ.240 கோடி தமிழக அரசுக்கு வரி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம், தான் தயாரிக்கும் செல்போன்களை வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்வதாகவும், உள்நாட்டில் விற்பனை செய்வதில்லை என்றும் கூறி தமிழக அரசிடம் இருந்து வரிச்சலுகை பெற்றது. ஆனால் அங்கு தயாராகும் செல்போன்களை உள்நாட்டிலேயே விற்று ரூ.2,400 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக தமிழக அரசு புகார் கூறியது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் வரி வாய்ப்பு செய்த நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்தவேண்டும் என உத்தரவுஉத்தரவிட்டதோடு, 8 வாரத்திற்குள் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறியது.

Leave a Reply