பாபர், மனோரஞ்சன் போன்ற இந்திப்படங்களிலும், ராமாயணம் டிவி தொடரில் கும்பகர்ணனாக நடித்தவருமான ராகேஷ் தீவானா என்ற பிரபல நடிகர் உடல் எடையை குறைப்பதற்காக செய்த அறுவை சிகிச்சை காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ராஜேஷ் தீவானா, சமீபகால உடல் எடை மிகவும் அதிகரித்து காணப்பட்டார். இதனால் இவருக்கு வந்த பட வாய்ப்புகள் கைவிட்டு போயின. உடல் எடையை குறைத்தால் மட்டுமே இனி நடிப்புலகில் நீடிக்க முடியும் என்ற காரணத்தால் உடல் எடையை திடீரென குறைக்க இரப்பையின் அளவை குறைக்கும் ஆபரேஷன் செய்து கொள்ள முடிவு செய்தார்.
ஆனால் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் பரிதாபமாக மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராகேஷின் மகள் ஷிவானி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “‘மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால்தான் என் தந்தை உயிரிழந்தார் என்று தெரிவித்தார். என் அப்பாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறியுள்ளார்.
ராகேஷின் மரணம் பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது