MH 370 விமானத்தை கடத்திய 11 தீவிரவாதிகள் கைது. சிறையில் 239 பயணிகள்?

10  கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசியாவில் இருந்து 239 பயணிகளுடன் காணாமல் போன MH370 விமானத்தை கடத்தியதாக 11 தீவிரவாதிகளை மலேசிய போலீஸ் கைது செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளில் ஒருவர் பெண் ஆகும். இவர்கள் அனைவரும் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் என்றும், விமானத்தை கடத்த உதவியவர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே ரஷ்ய பத்திரிகை விமானம் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தான் நாட்டில்தான் வைக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது அல்கொய்தா தீவிரவாதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யபட்டிருப்பதால் அந்த சந்தேகம் வலுக்கின்றது.

10aமேலும் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் விமானத்தில் 200 கிலோ லித்தியம் பேட்டரி கடத்தப்பட்டதாகவும், இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான நாடுகளின் மீது கடுமையான தாக்குதல் நடத்த விமானத்தை உபயோகிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் இந்தியாவில் அடங்கும் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய தகவல்.

இந்த விமானத்தை கடத்த மூளையாக இருந்தவன் பின்லேடனின் மருமகனான சுலைமான் அபு கெய்த் என்றும் கூறப்படுகிறது. இந்த 11 பேர்களுக்கும் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்த திட்டமிட்ட காலித் முகமது ஷேக் பயிற்சி கொடுத்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானப்பயணிகள் அனைவரும் பல நாடுகளுக்கு குழு குழுவாக கடத்தப்பட்டு சிறையில் அடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

11 தீவிரவாதிகளின் கைது நடவடிக்கையால் விமானப்பயணிகளின் உறவினர்கள் பெரும் பதட்டம் அடைந்துள்ளனர்.

10b

Leave a Reply