நேற்று மேற்குவங்காளத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “மோடி ஒரு காகிதப்புலி, நான் ஒரு உண்மையான வங்காளப்புலி என்று பேசினார். அதற்கு இன்று நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று மேற்குவங்க மாநிலம் பங்குராவில் பேசிய மோடி, “என்னை காகிதப்புலி என்று கூறும் மம்தா எதற்காக என்னை பார்த்து பயப்படுகிறார். காகிதப்புலிக்கே பயப்படும் மம்தா, உண்மையான புலி வந்தால் என்ன செய்வார் என்பதை சொல்லவே தேவையில்லை.
வங்காளத்தின் உண்மையான புலி இங்குள்ள துடிப்புமிக்க இளைஞர்கள்தான். பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகாவது மம்தா பானர்ஜி தனது நாடகத்தை நிறுத்திவிட்டு, மேற்குவங்கத்தை செழிப்பாக மாற்றுவதற்கு உண்டான திட்டத்தை தீட்டுவதில் அக்கறை காட்ட வேண்டும். நான் 100 கிலோ மீட்டருக்கு ரோடு போட்டால், அவர் 10 கிலோ மீட்டருக்காவது ரோடு போட வேண்டும். அதேபோல், நான் ஒரு லட்சம் வீடுகளை கட்டிக்கொடுத்தால், அவர் 10 வீடுகளையாவது கட்டிக்கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.