11 பதக்கங்கள் வென்று ஊர் திரும்பியபோது சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில்சிக்கிய கராத்தே வீரர்கள்.

8

பெங்களூர் நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற்று 11 பதக்கங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பிக்கொண்டிருந்த மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 11 கராத்தே வீரர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் சிக்கி காயமடைந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி குண்டுவெடித்து ஸ்வாதி என்ற பெண் பலியான சம்பவத்தில் 11 கராத்தே வீரர்களும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த இந்த கராத்தே வீரர்கள் பெங்களூரில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு 11 பதக்கங்களை வென்று மகிழ்ச்சியுடன் கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர்திரும்பி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவர்கள் வந்தபோது நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி, இரண்டு கராத்தே வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு வீரருக்கு அறுவை சிசிக்சை செய்யவேண்டியதிருப்பதால் அவர் மட்டும் சென்னையில் தங்க உள்ளார். மற்ற கராத்தே வீரர்கள் இன்று ஊர் திரும்புகின்றனர்.

இதுகுறித்து கராத்தே வீரர்களுடன் வந்த பயிற்சியாளர் நமது செய்தியாளரிடம் கூறியபோது, ” எங்கள் அணி கராத்தே போட்டியில் 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை வென்றது. எங்கள் அணியை அழைத்துக் கொண்டு பல முறை சென்னைக்கு வந்துள்ளேன். ஆனால், பெங்களூரு சென்றது இதுதான் முதல்முறை. முதல்முறையே இதுபோன்ற நிகழ்வில் சிக்கிக் கொண்டோம். இந்த சம்பவம் எங்கள் மாணவர்கள் யாரையும் மனதளவில் பாதிக்கவில்லை. அனைத்து மாணவர்களும் தைரியமாக இருந்தனர்.

ஒரு மாணவர் தவிர மீதம் உள்ள 19 பேரும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். சிகிச்சை பெற்று வரும் 14 வயது பிஜோய்குமார் என்ற மாணவன், குணமாக இன்னும் 10 நாள்களுக்கு மேல் ஆகும் என்று கூறுகின்றனர். இந்த மாணவரின் பெற்றோர் இங்கு வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அதனால் மாணவர் குணமாகும்வரை நான் தான் கவனித்துக் கொள்வேன் என்றார் புங்கோசெளபா.

Leave a Reply