உலக வங்கியிடம் இருந்து ரூ.50 கோடி கடன். சென்னை மாநகராட்சி

8சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக உலக வங்கியிடம் இருந்து ரூ.50 கோடி கடன் கேட்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகை கிடைத்தவுடன் சென்னை மாநகரத்தின் அடிப்படை கட்டமைப்பு பணிகள் விரிவுபடுத்தப்படும் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

சென்னை தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் வரை பறக்கும் பாதை ஒன்று திட்டமிட்டு இருப்பதாகவும், மாநகரம் முழுவதும் சுமார் 1000 கி.மீ தூரத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் அமைக்கப்படவும், உலக வங்கியில் இருந்து நிதி கேட்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முறையான திட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் விக்ரம் கபூர் கூறினார்.

பல அடுக்குகள் கொண்ட பார்க்கிங் மையம் சென்னை தி.நகர் பாஷ்யம் தெருவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.மத்திய அரசு மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்த பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply