சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த யோகா குரு பாபா ராம்தேவ், தலித் மக்களின் வீடுகளுக்கு ராகுல் காந்தி செல்வது ஹனிமூனுக்கு செல்வதுபோ உள்ளது என்று பேசினார். இதற்கு தலித் மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு வந்தபோதும், தான் பேசியதில் எவ்வித தவறும் இல்லை என்று கூறினார்.
தேர்தல் ஆணையம் ராம்தேவ் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநில ஹோசியர்பூர் தொகுதியின், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரான பகவான் சிங் சோஹன், இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ராம்தேவின் தலையை கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பஞ்சாபில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஹொசியர்பூர் பஸ்நிலையம் அருகே ராம்தேவின் உருவபொம்மைக்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் தீவைத்தனர்.