இரண்டு வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள். அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.

twins 2அமெரிக்காவில் முதல்முறையாக இரண்டு வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்த இரட்டையர்கள் என்ற பெருமை அமெரிக்காவில் சமீபத்தில் பிறந்த இரட்டையர்களுக்கு நேர்ந்துள்ளது.

அமெரிக்காவில் பிறந்த இரட்டையர்களான மார்கஸ் மற்றும் லூகாஸ் ஆகிய இரு சிறுவர்கள் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரட்டையர்கள். இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தை என்பதுதான் அதிசயம்.

இவர்களின் தாய் Mum Charlotte Hilbrandt என்பவர் முதல் நாள் தன்னுடைய முன்னாள் கணவருடனும், மறுநாள் தனது புதிய காதலனுடனும் உறவு கொண்டுள்ளார். இரு உறவுகளுக்கும் இடையே 48 மணிநேர இடைவெளி இருந்தாலும், இரு ஆண்களின் உயிரணுக்களும் இரண்டு வெவ்வேறு கருமுட்டைகளில் நுழைந்து இரட்டைக்குழந்தைகளாக உருவெடுத்து உள்ளது. ஒரு பில்லியன் நபருக்கு ஒரு சதவிகிதம் மட்டுமே நடக்கும் இந்த அபூர்வ சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

இரட்டையர்கள் பிறந்த பிறகு செய்யப்பட்ட டி.என்.ஏ சோதனையில் இரு குழந்தைகளும் இரண்டு தந்தையர்களுக்கு பிறந்தது நிரூபணமானது.

இதுகுறித்து Royal College of Obstetricians and Gynaecologists என்ற நிறுவனத்தின் உரிமையாளர்  DR VIRGINIA BECKETT அவர்கள் கூறும்போது, ‘முதல் நபரின் உயிரணுக்கள் அதிகபட்சமாக நான்கு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். அதற்குள் அந்த பெண் வேறு ஆணுடன் உறவு கொள்ளும்போது இருவித உயிரணுக்களும் ஒன்றாக கலந்து இதுபோன்று நிகழ் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதை விஞ்ஞானத்தில் நிரூபிப்பது எளிது என்றாலும், அந்த பெண்ணின் மனநிலையில் இருந்து பார்க்கும்போது எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடியவில்லை என்று கூறினார். (The science is easily explained, but it may have been less easy for the mother to explain.)

twins 1

Leave a Reply