சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் கடந்த 2ஆம் தேதி மைசூர் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே என்ற கன்னட அமைப்பினர் லிங்கா படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காத கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று கன்னடியர்களை இழிவாக ரஜினியின் படப்பிடிப்பை கர்நாடகாவில் நடத்த விடமாட்டோம் என அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா கூறியுள்ளார்.
பணத்திற்காக ராக்லைன் வெங்கடேஷ் கர்நாடக மக்களுக்கு துரோகம் செய்கிறார் என்றும் ரஜினி படத்தின் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் இன்று 3வது நாளாக ராம்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடெஷ் கூறும்போது, இந்த போராட்டங்கள் எல்லாம் விளம்பரத்திற்காக செய்யப்படுகிறது. உண்மையிலே ரஜினிய கர்நாடக மக்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல ரஜினியும் கர்நாடக மக்கள் மீது அளவு கடந்து அன்பு வைத்துள்ளார்.எனவே எக்காரணம் முன்னிட்டும் ‘லிங்கா’படத்தின் படப்பிடிப்பை கர்நாடகாவில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற மாட்டோம். மேலும் கர்நாடகா முழுவதும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களும் கர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சருமான அம்பரீஷ் போன்ற நிறைய அரசியல்வாதிகளும் அவருடைய நலம் விரும்பிகளாக இருக்கிறார்கள். எதனைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை” என்று கூறினார்.