கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட் பெரும் வியப்பு அடைந்துள்ளது
அஜீத், அனுஷ்கா நடிக்கும் தல 55 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக அதிக பொருட்செலவில் மிகப்பிரமாண்ட முறையில் செட் அமைக்க வேண்டிய பணி இருப்பதால், கவுதம் மேனன் படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த இடைவெளியில் கவுதம் மேனன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து படத்திற்கான டியூன் அமைக்கும் பணியில் இருக்கிறார். இந்த படத்திற்காக ரஹ்மான் மொத்தம் ஆறு பாடல்களுக்கு ட்யூன் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
செட் அமைக்கும் பணி முடிந்தவுடன் ஒரே கட்டமாக படத்தின் 60% படப்பிடிப்பை முடித்துவிட கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார்.