ரஷ்யாவில் போலார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒரு விமானம் கடந்த வியாழக்கிழமை ரஷ்யாவின் சைரங்காவி என்ற நகரில் இருந்து யாகுட்ச்க் நகரை நோக்கி பறந்து சென்றுகொண்டிருந்தது. விமான சுமார் 28000 அடி உயரத்தில் பறந்த போது அந்த விமானத்தில் பயணம் செய்த இரினா வாசில்கொவா என்ற 25 வயது பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அருகில் விமானத்தை இறக்க எந்த விமான நிலையமும் இல்லாததால் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு டாக்டர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். விமான பயணி இரினாவுக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தன.
முதல் குழந்தை விமானம் பறந்து கொண்டிருக்கும்போதும், இரண்டாவது குழந்தை விமானம் ரன்வேயில் இறங்கிக்கொண்டிருந்தபோதும் பிறந்தன. தாயும், குழந்தைகளும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். தங்கள் நிறுவன விமானத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு விமான நிர்வாகம் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தது.