இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை உள்ளிட்ட பலவித விசாரணைகள் செய்ய ஐ.நா முடிவு செய்துள்ளது. இதில் சர்வதேச விசாரணையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என்றும், சர்வதேச விசாரணையை தவிர மற்ற அனைத்து பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ள இலங்கை தயாராக உள்ளது என்றும் இலங்கை அபதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கையில் சர்வதேச விசாரணை உள்ளிட்ட மேலும் பலகட்ட விசாரணைகள் நடத்த பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் வெளியுறவு அமைச்சர் செய்கிரா நேற்று இலங்கை அதிபரிடம் சந்தித்தார். அவரிடம் ராஜபக்சே சர்வதேச விசாரணையை தவிர மற்ற அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.