மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் விமானம். சோதனை ஓட்டம் வெற்றி.

flightஉலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன் எரிபொருள் செலவு மற்ற விமானங்களின் செலவை விட மூன்றில் ஒருபாகமே ஆகும் என்பதால் எதிர்காலத்தில் இதன் பயன்பாடு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள போரோடெக்ஸ் என்ற விமான நிலையத்தில் நேற்று E Fan என்று அழைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் விமானத்தின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடந்தது. 120 லித்தியம் மற்றும் அயன் பாலிமர் பேட்டரிகளின் உதவியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இருந்து இந்த விமானம் இயங்குகிறது.

தற்போது இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யும் E-Fan 2.0 மற்றும் நான்குபேர் பயணம் செய்யும் E-Fan 4.0 ஆகிய வகை விமானங்கள் மட்டுமே தயாராகி சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெரிய விமானங்களும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படும் என்றும் இந்த விமானத்தை வடிவமைத்த பொறியாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply