இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய பிரதமருடன் இணக்கமாக செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளதாக இன்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாஷிங்டன் மாகாண செய்தி தொடர்பாளர் ஜென் பிசாகி, ” உலக வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை இந்திய மக்கள் சந்தித்துள்ளனர். இந்த தேர்தலில் இந்திய மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவருடன் இணக்கமான உறவை ஏற்படுத்த அமெரிக்க தயாராக இருக்கிறது என்று கூறினார்.
இந்திய தேர்தலின் முடிவுகளை அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ளன. ஆசிய பகுதிகளில் ஜனநாயகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. இருநாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு இந்தியா-அமெரிக்காவுடனான உறவு மிகவும் முக்கியமானது
இவ்வாறு ஜென் பிசாகி கூறியுள்ளார்.