கல்லூரிகளுக்கே சென்று கல்விக்கடன் கொடுக்கும் கனரா வங்கி.

28453195.cms

மாணவர்களின் நலனை முன்னிட்டு கல்லூரிகளுக்கே சென்று கடன் கொடுக்கும் புதிய திட்டத்தைனை கொண்டு வர உள்ளதாக கனரா வங்கியின் தலைவர் A.K. துபே இன்று தெரிவித்துள்ளார்.

கல்விக்கடன் வாங்கவேண்டும் என்றால் பலமுறை வங்கிகளுக்கு அலையும் காலம் போய், தற்போது கல்லூரிகளுக்கு தேடி வந்து கடன் கொடுக்கும் நிலை வந்துள்ளது. இன்று சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கனரா வங்கியின் தலைவர் துபே கூறியதாவது, “மாணவர்களை அலையவிடாமல் கல்விக்கடன் கொடுக்க அவர்கள் இருக்கும் கல்லூரிகளுக்கே சென்று கடன் வழங்கும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

கல்விக்கடன் மட்டுமின்றி அனைத்து வகை கடன்களும், தாமதம் இன்றி பயனாளிகளுக்கு வழங்க உள்ளதாகவும், அவர் மேலும் கூறினார். தொழில் முனைவோர் வளர்ச்சிக்காக சேலத்தில் தனி கிளை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

கல்லூரிகளுக்கே வந்து கடன் கொடுக்கும் புதிய திட்டத்தினை மாணவர்களும், பெற்றோர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Leave a Reply