மத்தியில் மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும் என்ற கருத்து நாடு முழுவதும் பரவலாக பரவி வருவதால்,இந்திய பங்குச்சந்தையில் கடந்த மூன்று நாட்களாக வரலாறு காணாத எழுச்சி பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய உச்சத்தை பங்குச்சந்தை அடைந்து வருகிறது. இன்று வர்த்தகம் தொடங்கிய மறுநிமிடமே சென்செக்ஸ் புள்ளிகள் மளமள என உயர்ந்தது. இந்திய வரலாற்றில் சென்செக்ஸ் முதல்முறையாக 24000 புள்ளிகளை தாண்டியது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் புதிய சாதனை படைத்து வருகிறது. இன்று மதிய நேரத்தில் நிப்டி 7143ஆம் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நிப்டி 5000க்குள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில், மத்தியில் நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மும்பை பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.