டெல்லி அரசியலில் திடீர் திருப்பம். பிரதமர் போட்டியில் மம்தா பானர்ஜி.

8பாஜகவில் நரேந்திரமோடி, காங்கிரசில் ராகுல்காந்தி மற்றும் மூன்றாவது அணியில் ஜெயலலிதா ஆகியோர் பிரதமர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் இவர்களது வரிசையில் தற்போது மம்தா பானர்ஜியும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் ஜெயலலிதாதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த மம்தா பானர்ஜி, தற்போது எக்சிட் வாகெட்டுப்பு முடிவுகள் வந்தபின்னர், திடீரென தனது தலைமையிலான மத்திய அரசு அமையும் என அற்வித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் அறிவுரைப்படி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுல்தான் அகமத், “மத்தியில் காங்கிரஸ் ஆதரவுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய வாக்கெடுப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply