மும்பை தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் சாமியார் ஒருவரிடம் தனது பேராசையால் ரு.25 லட்சம் பணத்தை இழந்ததோடு அல்லாமல், தனது வாழ்க்கையையும் இழந்து தற்போது பரிதாபமான நிலையில் இருக்கிறார்.
மும்பையில் உள்ள சார்கோப் பகுதி காவல் நிலையத்தில் நேற்று தொலைக்காட்சி நடிகை ஒருவர் வந்து ஒரு திடுக்கிடும் புகாரை கொடுத்தார். அதில் தன்னுடைய வீட்டில் சிறப்பு பூஜை செய்து தருவதாக வந்த இரண்டு சாமியார்கள், தன்னை பலாத்காரம் செய்ததோடு, தன்னிடம் இருந்து ரூ.25 லட்சத்தையும் அப\கரித்து சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார். பின்னர் போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் பேரில் இஸ்மாயில் காசிம்கான் என்பவரை கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த பகவான் தாஸ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தொலைக்காட்சி நடிகை தனக்கு லாட்டரி சீட்டில் பரிசு விழவேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை செய்ய இஸ்மாயில் காசிம்கான் என்பவரை அணுகியதாகவும், அதற்காக நடிகை காசிம்கானிடம் ரூ. 25 லட்சம் கொடுத்ததாகவும் பின்னர் காசிம்கான், பகவான் தாஸ் என்ற உதவியாளருடன் நடிகையின் வீட்டிற்கு வந்து சிறப்பு பூஜை செய்வதுபோல நடித்து நடிகையை மயக்கி, பின் இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இஸ்மாயில்கான் மீது செக்சன் 376, மற்றும் 420 ஆகிய பிரிவுகளின்படி பொலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகை யார் என்ற தகவலை போலீஸார் தெரிவிக்கவில்லை. எனினும் மும்பையில் உள்ள சில துப்பறியும் ஊடகங்கள் அந்த நடிகை யார் என்பதை கண்டுபிடித்துவிட்டன. அந்த நடிகையின் பெயர் கீர்த்தி நக்பூர் என்றும், அவருடைய வயது 27 என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனியாக இருப்பதாகவும் தெரிகிறது.