கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கருத்து திணிப்பே. மு.க.ஸ்டாலின்

02stalin1சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, வாக்கெடுப்பிற்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு பயந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள பொய்யான கருத்து திணிப்பு என்று கூறியுள்ளர்.

தமிழகத்தில் சட்டம் சீரழிந்துள்ளது என்பதை நேற்று காலை அதிமுக கவுன்சிலர் ஒருவர் ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டதில் இருந்தே தெரிகிறது என்று கூறிய மு.க. ஸ்டாலின் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைவரையும் எதிர்பார்ப்பையும் மீறி திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த பிரபல பத்திரிகை ஆசிரியர் ஒருவர், “மு.க.ஸ்டாலின் சொல்வது போல் தமிழக ஊடகங்கள் வேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு பயந்து கருத்துக்கணிப்பு வெளியிட்டிருக்கலாம். ஆனால் அகில இந்திய அளவில் இருக்கும் ஊடகங்கள் எதற்காக ஜெயலலிதாவுக்கு பயப்பட வேண்டும். அவைகளும் அதிமுகதான் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றே தெரிவித்துள்ளன.

மேலும் திமுகவினர் தங்களுக்கு வரவுள்ள தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply