[carousel ids=”33799,33800,33801,33802,33803,33804,33805,33806″]
சூரிய வெளிச்சம் பட்டால் நிறம் மாறும் அல்ட்ரா வயலட் டி-சர்ட் வரும் 18 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
35 அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த டீ-சர்ட், பல கருப்பு வெள்ளை படங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த படங்கள் சூரிய வெளிச்சம் பட்டவுடன் வண்ண வண்ண படங்களாக மாறும் அதிசயம் நடக்கும்.
புறஊதா கதிர்கள் செறிவூட்டிய மை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ள இந்த டி சர்ட் வரும் 18ஆம் தேதி லண்டன், நியூயார்க் மற்றும் டோக்கியோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாளடைவில் இந்த டி-சர்ட் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்
இந்த டி-சர்ட்டை வடிவமைக்க Gap Visionaire என்ற நிறுவனம் சில அனுபவம் வாய்ந்த வடிவமைப்பாளர்களுக்கு பயிற்சி கொடுத்து இந்த சாதனையை புரிந்துள்ளது. இந்த டி-சர்ட்டுகள் தற்போது நியுயார்க்கில் உள்ள பிரீஸ் திருவிழா கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.