மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன பதவி? டெல்லியில் விறுவிறுப்பு.

 12நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் மோடி தலைமையிலான அரசு அமையும் என அனைத்து ஊடகங்களும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதால் இப்பொழுதே ஆட்சி அமைப்பது குறித்தும் யார் யாருக்கு என்னென்ன அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்தும் பெரும் விவாதம் நடந்து வருகிறது.

 தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படும் என்றும் வெங்கையா நாயுடுவுக்கு விவசாயத்துறையும், மனோகர் பரிக்கர் உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படும் என தெரிகிறது.

 மேலும் நிதின்கட்காரிக்கு சாலை போக்குவரத்துத் துறையும், அனந்தகுமாருக்கு நாடாளுமன்ற விவகாரத்துறையும், ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்டத்துறையும், ராஜீவ் பிரதாப் ரூடிக்கு விமானப் போக்குவரத்துத் துறையும், ஷாநவாஸ் உசேனுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

 மேலும் அத்வானிக்கு கட்சியின் மிக முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் முடிந்தவுடன் அவரை ஜனாதிபதியாக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

 மேலும் தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியசுவாமி, பொன்ராதாகிருஷ்ணனுக்கும் அமைச்சர் பதவிகள் காத்திருக்கின்றன.

 மேலும் அமைச்சரவையில் லோக் ஜனசக்தி ,அகாலி தளம் சிவசேனா கட்சி, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply