உத்தம வில்லன் படத்தின் முழுக்கதையையும் தன்னிடம் கூறினால் மட்டுமே கால்ஷீட் தரமுடியும் என நடிகை பார்வதிமேனன் பிடிவாதமாக இருப்பதால் அவர் படத்தில் இருந்து நீக்கக்கூடும் என தெரிகிறது.
கமல்ஹாசனின் படம் என்றாலே அந்த படத்தின் முழுக்கதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கமல்ஹாசன் ஆகிய மூவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கே அவர்களுடைய பகுதி மட்டுமே விளக்கப்படும்.
இந்நிலையில் கமல்ஹாசனின் உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் பார்வதிமேனன், படத்தின் முழுக்கதையையும் சொன்னால்தான், தன்னுடைய கேரக்டர் மற்ற இரண்டு ஹீரோயின்களின் கேரக்டர்களைவிட சிறந்ததா? என்பதை தன்னால் கணிக்க முடியும் என்றும், அதனால் முழுக்கதையையும் தன்னிடம் விளக்கவேண்டும் என்றும் இயக்குனர் ரமேஷ் அரவிந்திடம் வற்புறுத்தி வருகிறார்.
தற்போது கமல்ஹாசன் கேன்ஸ் திரைப்படவிழாவிற்காக பிரான்ஸ் சென்றிருப்பதால், அவர் திரும்பி வந்தவுடன் இந்த பிரச்சனை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறாது.