தமிழ்நாட்டில் பலர் அதிமுக சார்பில் 37 தொகுதிகள் வென்றாலும் யாதொரு பயனும் இல்லை , என்றும் தேசிய அளவில் தமிழ்நாடு தனித்து விடப்பட்டு விட்டது என்று பதிவிட்டு வருகிறார்கள் ஆனால் உண்மை நிலையை அவ்வாறு இல்லை.
இந்திய அரசியல் அமைப்பின் படி மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல்செய்து வெற்றி பெற வேண்டுமானால் 3 இல் 2 பங்கு அதாவது 369 உறுப்பினர்களின்ஆதரவு தேவை.
தற்போது பாஜக கூட்டணிக்கு 339 உறுப்பினர்களின் ஆதரவுமட்டுமே உள்ளது ஆகவே தமிழ்நாட்டின் அதிமுக வின் கோரிக்கைகளை மறுக்கமுடியாமல் மத்திய அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும்..
ஏன் எனில் அதிமுக தவிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் , காங்கிரஸ் மற்றும் இன்னும் சில கட்சிகள் பாஜகவை கண்டிப்பாக ஆதரிக்காது , ஆகவே தமிழ்நாட்டிற்கு இந்திய அரசில் முக்கியத்துவம் கிடைத்தே தீரும் ,,
மாநிலங்களவையிலும் ஒரு சட்ட மசோதாவை வெற்றியாக்க 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அங்கு இப்போது பாஜகவுக்கு 46 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. கூட்டணியாக சேர்ந்தாலும் 77 உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இனி நடக்க போகும் மாநிலங்களவை தேர்தலில் கிடைக்கும் ஆதரவு 10 ஆக இருக்கும். ஆகவே அதற்கும் தமிழ்நாட்டு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதிமுக 11 உறுப்பினர்களை கைவசம் வைத்துள்ளது. எனவே பாஜக , அதிமுக கூட்டு காலத்தின் கட்டாயம் ,,
காங்கிரஸ் போல பாஜக தமிழ்நாட்டை புறக்கணிக்காது ,,. மத்திய அரசின் பிடி இப்போதும் தமிழ்நாட்டின் கையில் தான் ஆனால் ஆட்சி கவிழ்ப்பு டிராமா தான் இனி எடுபடாது ,,,
மத்திய மின் தொகுப்பு , மீனவர்கள் தாக்குதல் , திட்ட ஒதுக்கீடு போன்றவற்றில் தமிழ்நாட்டின் குரலுக்கு இனி மதிப்பிருக்கும் தமிழ்நாடுதனித்து விடப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.