சுதந்திரம் பெற்றதில் இருந்து வரலாறு காணாத தோல்வியை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, சோனியா மற்றும் ராகுல்காந்தியிடம் இருந்து காங்கிரஸை விடுவிக்கவும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தியை நியமிக்கவும் கோரி வட இந்தியாவின் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட இருக்கும் நிலையில் இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவரும் கட்சியின் பதவியை இன்று ராஜினாமா செய்வார்கள் என்று டெல்லியில் கூறப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மற்ற அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் மண்ணை கவ்வி உள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் ப்ரியங்கா காந்தி தீவிரமாக பிரச்சாரம் செய்ததால் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாகவும், இல்லையேல் இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்திருக்கும் என பெரும்பாலானோர் கருதுகின்றனர். எனவே ப்ரியங்கா காந்தி அடுத்த காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை காந்தி குடும்பத்தில் இருந்து கைப்பற்ற வேண்டும், ப.சிதம்பத்தை தலைவராக்க வேண்டும் என்றும் ஒரு கோஷ்டியினர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.