பிரதமராக மோடி முறைப்படி தேர்வு. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், வாழ்த்து.

election-results-2014-prime-minister-

நாடாளுமன்ற குழு தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். மோடியின் பெயரை கட்சியின் மூத்த தலைவர் அத்வானி முன்மொழிய, முரளி மனோகர் ஜோஷி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் வழிமொழிந்தனர். மேலும் நரேந்திர மோடி பிரதமராகவும் கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார்.

பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடியை அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பாரிவேந்தர், பொன்.ராதா கிருஷ்ணன், ஈஸ்வரன், விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் மற்றும் சுதீஷ் பங்கேற்றனர்.

நரேந்திர மொடி பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.

Leave a Reply