[carousel ids=”34201,34202,34203″]
ரஷ்யாவில் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற இரண்டு சகோதரிகள் சென்ற கார் ஆளில்லா லெவல் கிராஸிங் பகுதியை கடந்தபோது சரக்கு ரயில் ஒன்று பயங்கரமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரு சகோதரிகளும் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவில் 87 வயதான இரண்டாம் உலகப்போர் வீரர் Artem. இவர் நேற்று தனது சொந்த ஊரில் மரணம் அடைந்தார். தந்தையின் மறைவு செய்தியை கேட்ட வெளியூரில் இருந்த அவருடைய இரண்டு மகள்கள் Natalia Lahova, வயது 63, மற்றும் அவரது சகோதரி Lioudmila, வயது 60 ஆகிய இருவரும் காரில் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்ற கார் ஆளில்லா லெவல் கிராஸிங் ஒன்றை கடக்க முயன்றபோது 90 கி.மீ வேகத்தில் வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று காரின் மீது பயங்கரமாக மோதியது. கார் சுக்குநூறாக நொறுங்கி காரில் பயணம் செய்த இரண்டு சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்ற மகள்கள் அகால மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரயில் கார் மீது மோது அதிர்ச்சி வீடியோ அங்கிருந்த சிசிடிவி காமெராவில் பதிவாகியுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1gkdt0R” standard=”http://www.youtube.com/v/_sQTFwEbpp0?fs=1″ vars=”ytid=_sQTFwEbpp0&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9968″ /]