தாய்லாந்தில் திடீர் ராணுவ புரட்சி. 144 தடை உத்தரவு அமல்.

1400754024000-AFP-530023790தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் திடீரென ராணுவப்புரட்சி நடந்துள்ளது. அந்நாட்டில் ராணுவம் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாக, அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி பிரயுத் சான் ஓ சா நேற்று அதிகாரபூர்வமாக தொலைக்காட்சி மூலம் அறிவித்துள்ளார்.

நேற்று இரவு தொலைக்காட்சியில் பேசிய ராணுவ தலைமை தளபதி நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ஆயுதப்படை, ராணுவம், காவல்துறை ஆகியவை இணைந்த தேசிய அமைதி பேணும் குழு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது” என்று கூறியுளார்.

தாய்லாந்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், ராணுவ புரட்சியால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும், நாட்டில் உள்ள ஒழுங்கற்ற நிலை காரணமாகவே ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும், மீண்டும் நாட்டில் அமைதி திரும்பியவுடன் ராணுவம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்கும் என்று கூறினார்.

Leave a Reply