கணவருடன் சேர்ந்து வாழத்தயார். மோடி மனைவி யசோதா பேட்டி

josodaben.jpgநாளை மறுநாள் பாரதப்பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திரமோடி, சிறுவயதிலேயே கொள்கைக்காக மனைவியை பிரிந்தவர். திருமணம் ஆனதை பல ஆண்டுகாலம் மறைத்து வைத்திருந்த மோடி, கடந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தில் திருமணம் ஆனதை ஒப்புக்கொண்டார். அதற்கு எதிர்க்கட்சிகள் பலவாறு விமர்சனம் செய்தபோதும், மோடி தனது திருமணம் குறித்தோ, மனைவியை பிரிந்தது குறித்தோ எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. மோடியின் சகோதரர் மட்டுமே ஒருசில கருத்துக்களை தெரிவித்தார்.,

இந்நிலையில் மோடியிடம் இருந்து தனியாக பிரிந்து தனது சகோதரரின் வீட்டில் வாழ்ந்து வரும் அவரது மனைவி யசோதா பென், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது கணவர் நாட்டின் பிரதமராக பதவியேற்பதில் பெருமை அடைவதாகவும், தாங்கள் சிறுவயதிலேயே பிரிந்திருந்தபோதும் விவாகரத்து செய்யவில்லை என்றும், அதனால் மோடி அழைத்தால் மீண்டும் அவருடன் சேர்ந்து வாழத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மனைவி யசோதாவின் பேட்டி குறித்து மோடி எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. தனக்கு நாட்டை முன்னிலைப்படுத்துவதில் மட்டுமே கவனம் உள்ளது என்றும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வு குறித்து தான் எவ்வித திட்டமும் வைத்திருக்கவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply