விஜய்யை விட சூர்யாதான் பெஸ்ட் என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேட்டியால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பார்த்திபன் தற்போது இயக்கிவரும் “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” என்ற படத்தில் ஆர்யா,அமலாபால்,விஜய்சேதுபதி,டாப்சி,தம்பிராமையா ஆகியோர் கெளரவ வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு இயக்குனர் பார்த்திபன் பேட்டியளித்தார்.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில் விஜய் மற்றும் அஜீத்துடன் ஏன் படங்கள் நடிக்கவில்லை என்பது. அதற்கு பதில் கூறிய பார்த்திபன் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. சத்யராஜ் நடித்த புரபொசர் கேரக்டரில் நடிக்க ஷங்கர் முதலில் என்னைத்தான் அணுகினார். ஆனால் எனக்கு விஜய்யுடன் நடிக்க தயக்கம் இருந்தது. அமீர்கானின் அற்புத நடிப்பை விஜய்யால் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. எனக்கு தெரிந்து அந்த கேரக்டரை சூர்யா செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த குழப்பத்தில்தான் நான் விஜய்யுடன் நடிக்கவில்லை என்று கூறினார். அஜீத்துடன் நடிக்க எவ்வித வாய்ப்பும் இன்னும் வரவில்லை என்றும், வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறினார்.
பார்த்திபனின் இந்த பேட்டி கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் விஜய் அற்புதமாக நடித்து மாபெரும் வெற்றி படத்தை சர்ச்சைக்குரிய வகையில் பார்த்திபன் விமர்சனம் செய்வது தனது படத்துக்கு விளம்பரம் தேடும் கேவலமான முயற்சி என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.