சென்னை தொழிலதிபருடன் நடிகை ஸ்வாதி திருமணமா?

swathi-to-marry-industralist-700x454சென்னை தொழிலதிபர் ஒருவரை நடிகை ஸ்வாதி காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோலிவுட் வட்டார செய்திகள் கூறுகின்றன.

சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான நடிகை ஸ்வாதி, தற்போது வடகறி படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த 28வயது இளம் தொழிலதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை ஸ்வாதி, தான் எந்த ஒரு தொழிலதிபரையும் காதலிக்கவில்லை என்றும் தன்னுடைய கவனம் முழுவதும் இப்போது சினிமாவில் நடிப்பதில் மட்டுமே உள்ளதாகவும் இன்னும் சில ஆண்டுகள் கழித்தே திருமணம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜெய்யுடன் நடித்த வடகறி திரைப்படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் விரைவில் கோலிவுட்டில் முன்னணியாக நடிகையாக மாறுவேன் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply